கொழும்பு துறைமுக நகரில் ஆரம்பிக்கப்படவுள்ள பிரமாண்ட திட்டம்
இலங்கை
கொழும்பு துறைமுக நகரத்தில் 540 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் ஒரு பெரிய அளவிலான கட்டுமானத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டின் நோக்கம், லண்டனின் பிக் பென்னால் ஈர்க்கப்பட்ட 15 மீட்டர் பிரம்மாண்ட கடிகாரத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய கலைப் படைப்பாக மாறக்கூடிய ஒன்றைக் காண்பிப்பதாகும்.
மேலும் இது கின்னஸ் உலக சாதனைகளின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“Clothespin Towers” என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம், இலங்கை அரசாங்கத்திடமிருந்து வரி விலக்குகளைப் பெற்ற துறைமுக நகரத்தின் நான்கு முக்கிய மேம்பாடுகளில் ஒன்றாகும்.
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்ட அண்மைய அரசாங்க வர்த்தமானி அறிவிப்புகளின்படி, வருமான வரி, வேட், சுங்க வரி மற்றும் பிற வரிகளிலிருந்து 25 ஆண்டுகள் வரையான நிவாரணம் இதில் அடங்கும்.
இந்தத் திட்டத்தில், இரட்டை கோபுரங்கள் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள், ஏழு நட்சத்திர ஹோட்டல், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பிரீமியம் அலுவலக இடம் ஆகியவை இடம்பெறும்.
கோபுரங்களில் ஒன்று உலகின் மிகப்பெரிய செங்குத்து கலைக்கூடத்தை கொண்டிருக்கும்.
ஒவ்வொரு தளமும் உலகளாவிய கலைஞர்களைக் காண்பிக்கும் தனித்துவமான கலை கண்காட்சி இடமாகவும், உலகத்தரம் வாய்ந்த நிகழ்வுகளை நடத்தும் இடமாகவும் இருக்கும்.
இந்தத் திட்டம் அதன் முதல் ஆண்டில் மாத்திரம் சுமார் 280 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்துடன் மேலும் மூன்று பெரிய அளவிலான திட்டங்களுக்கும் இதேபோன்ற வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






















