எஸ்ஜே சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
சினிமா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் எஸ்.ஜே சூர்யா. குறிப்பாக பல நட்சத்திர ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.. இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். படத்திற்கு கில்லர் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படம் இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கில்லர் படத்தின் 2 போஸ்டர்களை பகிர்ந்திருந்த நிலையில், இன்று மேலும் ஒரு போஸ்டரை பகிர்ந்து ரசிகர்களுக்கு எஸ்.ஜே.சூர்யா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் .






















