• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Kiss cam வீடியோ சர்ச்சையால்  Cold play CEO ராஜினாமா

அமெரிக்காவில் Astronomer எனும் தரவு மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. Andy Byron என்பவர் கடந்த 2023 முதல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். Andy Byron, மேகன் கெர்ரிகன் பைரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் பாஸ்டன் நகரில் கோல்ட் பிளே குழுவின் இசைகச்சேரி நடைபெற்றது. இதில் கிஸ் கேம் என்ற விளையாட்டு நடைபெற்றது. அதாவது, கேமரா ரேண்டம் ஆக பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் ஒரு ஜோடியை திரையில் காட்டும். அந்த ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த கான்சர்ட்டில் Andy Byron தனது நிறுவனத்தின் மனித வள (HR) அதிகாரியான Kristin Cabot உடன் கலந்துகொண்டார்.

கிஸ் கேமில் கேமரா அவர்களை நோக்கி திரும்பியது. திரையில் தங்கள் படம் தெரிவதால் அதிர்ச்சியடைந்த இருவரும் தங்களை மறைத்துக்கொள்ள முயன்றனர்.

அப்போது பாடகர் கிறிஸ் மார்ட்டின், இதைப் பார்த்து மேடையில், "ஓ..! இவர்கள் இருவரையும் பாருங்கள்.. இது ஒரு காதல் உறவா? வெட்கப்படுகிறார்கள்.." என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதையடுத்து, Astronomer நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் தலைவர்கள் நடத்தை மற்றும் பொறுப்புணர்வில் ஒரு தரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சமீபத்தில், அந்தத் தரம் பூர்த்தி செய்யப்படவில்லை" என்று தெரிவித்தது.

சர்ச்சையை அடுத்து, தனது பதவியை ஆண்டி பைரன் ராஜினாமா செய்துள்ளார். ஆண்டி பைரனின் ராஜினாமா கடிதத்தை இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொண்டது.

இணை நிறுவனர் மற்றும் தலைமை தயாரிப்பு அதிகாரி பீட் டிஜாய் இடைக்கால CEO ஆக செயல்படுவார் என்றும் Astronomer அறிவித்துள்ளது. 
 

Leave a Reply