• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனையில் இன்று கையெழுத்து போராட்டம்

இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துசெய்யுமாறு கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று கல்முனையில் இடம்பெற்றது.

சம உரிமை இயக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர அம்மன் கோவில் பகுதியில் இன்று காலை கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துசெய்தல் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் அனைத்து இனத்தவர்களுக்கும் சம உரிமை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷாங்களை எழுப்பியவாறு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

Leave a Reply