லாஸ் ஏஞ்சல்ஸில் நடுவானில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமான எஞ்சின்..
அமெரிக்காவில் நேற்று, லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி டெல்டா ஏர் லைன்ஸ் உடைய போயிங் 767-400 ரக பயணிகள் விமானம் புறப்பட்டது.
ஆனால் டேக்-ஆஃப் ஆனதும் அதன் இடது எஞ்சினில் தீப்பிடித்ததால், மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது.
விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது. தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டெல்டா விமானத்தில் எஞ்சின் தீப்பிடிப்பது இது இரண்டாவது முறை. கடந்த ஏப்ரல் மாதமும் ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது.























