AK64 படத்தை உறுதி செய்த ஆதிக் ரவிச்சந்திரன்
சினிமா
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமாரின் 64வது (AK64) படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவலாக நெட்டிசங்களால் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அதனை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி படுத்தியுள்ளார்.
இப்படம் கேங்ஸ்டர் திரைப்படமாக அல்லாமல் வேறு விதமாக இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும் என ஆதிக் கூறியுள்ளார்.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. Good Bad ugly படத்தில் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சுப்ரீம் சுந்தர் சண்டை இயக்குநராக பணிபுரிய உள்ளார். அஜித்திற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் மோகன்லால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித் மற்றும் ஆதிக் கூட்டணி மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.






















