அமைச்சர் விஜித ஹேரத்துடன் தென்னிந்திய பிரபலங்கள் விசேட சந்திப்பு
இலங்கை
வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்திற்கும், பிரபல இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸிற்கும் இடையில் இன்று (19) காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் இலங்கையின் வளமான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள் இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்தவும், எமது வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தவும் உதவும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தமது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டின் அழகிய நிலப்பரப்புகள் மற்றும் வரலாற்று சின்னங்களை உலகளாவிய படைப்பு முயற்சிகளுக்கான பின்னணியாகப் பயன்படுத்த முடியும் எனவும் சுற்றுலா துறை அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்துள்ளார்.























