எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சதுப்பு நிலங்களில் உள்ள கட்டுமானங்கள் அகற்றப்படும் – அமைச்சர் கே.டி. லால்காந்த
இலங்கை
சதுப்பு நிலங்களில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் அகற்றப்படும் என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
சதுப்பு நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் உள்ள 23 சதுப்பு நிலங்களின் எல்லைகளை தீர்மானிப்பதற்காக, இதை ஒரு தேசிய தேவையாகக் கருதியே அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தைத் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, எத்தனை எதிர்ப்புகள் மற்றும் தடைகள் வந்தாலும், சதுப்பு நிலங்களில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் அகற்றப்படும் என அவர் தெரிவித்தார்.






















