வடக்கின் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்டார் சபாநாயகர்
இலங்கை
நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னஅங்கு பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் பார்வையிட்டார்.
அதன்படி , நேற்று முற்பகல் யாழ் . பொதுசன நூலகத்திற்கு சென்ற சபாநாயகர் நூலகத்தினை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் கோட்டைக்கு சென்று கோட்டை பகுதிகளையும் பார்வையிட்டார்.
இதேவேளை, அவர் நேற்று மாலை வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள சபாநாயகர் பல்வேறு இடங்களிற்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















