நான் அப்செட் ஆனால் இதை செய்வேன் - கீர்த்தி சுரேஷ்
சினிமா
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் `உப்பு கப்புரம்பு ' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் அமேசான் பிரைமில் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷ் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அந்த கதாப்பாத்திரத்தை கையாண்டுள்ளார். இப்படத்தில் சுகாஸ் கதாநாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் அப்செட் அல்லது மனம் சரியில்லை என்றால் என்ன செய்வேன் என கூறியுள்ளார். அதில் "நான் அப்செட் ஆகிவிட்டேன் என்றால் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக் கொண்டு தனியாக Drive பண்ணுவேன். அப்போது நல்ல இசையை கேட்பேன். அதுமட்டுமின்றி வீட்டில் நான் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். எந்த Upset வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் போதும் எல்லாம் காணாமல் போய்விடும்" என கூறியுள்ளார்.





















