Chiyaan64 - ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம்
சினிமா
வீர தீர சூரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ளார்.
விக்ரமின் 64-வது படமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
முன்னதாக விக்ரமின் அடுத்த படத்தினை மடோன் அஸ்வின் இயக்குவதாக இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர் அப்படம் கைவிடப்பட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அப்படம் கைவிடப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பிரேம் குமார் இயக்கும் இப்படம் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடக்க இருக்கிறது. இப்படத்தை முடித்துவிட்டு மடோன் அஸ்வின் படத்தில் நடிக்க இருக்கிறார் சீயான் விக்ரம்.























