• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தெஹிவளையில் துப்பாக்கி சூடு

இலங்கை

தெஹிவளை, ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சற்று நேரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தற்சமயம், அவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 

Leave a Reply