பொலிவுட் திரைப்பட நடிகர் ஷாருக்கானின் இலங்கை விஜயம் ரத்து
இலங்கை
கொழும்பில் அமைந்துள்ள சிட்டி ஒப் ட்ரீம்ஸ் ( City of Dreams) நட்சத்திர விருந்தக திறப்பு விழா நிகழ்வில் பொலிவுட் திரைப்பட நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ளவிருந்த நிலையில், தற்போது அவரின் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களால், ஷாருக்கான், முதலில் திட்டமிட்டபடி, விருந்தக திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான திட்டமான இது, அனைத்து வசதிகளையும் கொண்ட தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது.























