ஆகஸ்டில் திருமணம் நடக்குமா? டுவிஸ்ட் கொடுத்த விஷால்- ரசிகர்கள் அதிர்ச்சி
சினிமா
விக்னேஷ் நடிக்கும் 'ரெட் பிளவர்' பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சங்க செயலாளர் விஷால் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் 'ஆகஸ்டு 29-ந்தேதி நடக்க இருந்த உங்கள் திருமணம் தள்ளிப்போவதாக பேச்சு அடிபடுகிறதே...' என்று கேட்கப்பட்டது. இதற்கு விஷால் பதிலளிக்கும்போது, ''நடிகர் சங்க கட்டிடம் விரைவில் திறக்கப்படும். எனது திருமணம் அங்குதான் நடக்கும். நிச்சயம் தாமதம் ஆகாது. ஆகஸ்டு 29-ந்தேதி நல்ல செய்தி சொல்வேன்'' என்றார்.
நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்டு 29-ந்தேதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.























