கண்டி எசல பெரஹெரா ஜூலை 25 ஆரம்பம்
இலங்கை
கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, வருடாந்திர கண்டி பெரஹெரா ஜூலை 25 அன்று நான்கு முக்கிய தேவாலயங்களில் ‘கப் நடும்’ சடங்குடன் தொடங்கும்.
அதைத் தொடர்ந்து ஐந்து நாள் எத்துல் பெரஹரா நடைபெறும்.
அதையடுத்து, ஜூலை 30 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு கும்புல் பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர வீதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதம கண்காணிப்பாளர் கலாநிதி பிரதீப் நிலங்க தேலா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எசல பெரஹெராவிற்கு யானைகள் பற்றாக்குறை ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.























