மெய்யழகன் படத்தை தொடர்ந்து விக்ரமின் 64-வது படத்தை இயக்குகிறார் பிரேம்குமார்
சினிமா
வீர தீர் சூரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ளார்.
விக்ரமின் 64-வது படமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்ரமின் 64-வது படத்தை இயக்குகிறார் 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார். இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
முன்னதாக விக்ரமின் 64-வது படத்தினை மடோன் அஸ்வின் இயக்குவதாக இருந்தது. இப்போது இந்த அறிவிப்பால் மடோன் அஸ்வின் இயக்கவுள்ள படம் கைவிடப்பட்டதாகவே கூறப்படுகிறது.























