ஓஹோ எந்தன் பேபி படத்தின் காதல் எட்டிப்பாக்க பாடலின் லிரிக் வீடியோ ரிலீஸ்
சினிமா
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் இடம்பெற்ற காதல் எட்டிப்பாக்க பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.






















