• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாதிக்கப்பட மக்களுக்கு விரைவாக நீதியை வழங்க வேண்டும்- சுகிர்தராஜ் வலியுறுத்து

இலங்கை

நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் புதைகுழிகள் உள்ளிட்டவற்றுக்கு காலம் தாழ்த்தாது விசாரணைகளை விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், தமது இணையம் 22 அமைப்புக்களை ஒன்றிணைத்து மனித உயிர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்து வருகிறது எனவும் தற்போது வடக்கில் பல மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டதற்கான புதைகுழிகள் இனங்காணப்பட்டு அவை அகழப்பட்டு அதிகளவான மனித என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமது ஒன்றியம் கடந்த காலம் முதற் கொண்டு இன்றுவரை மனித உரிமைகள் பாதுகாப்பு சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுதுத்தி குரல் கொடுத்து அரசுகளுக்கு பெரும் அழுத்தை கொடுத்து வரும் அமைப்பு என்ற ரீதியில் தற்போதைய பேசுபொருளான மனித புதைகுழி விவகாரத்துக்கு உடன் விசாரணை மேற்கொண்டு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

அத்துடன் அண்மையில் கொழும்பில் மர்மமான முறையில் இறந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்பட்டு உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என கோருகிறோம் எனவும் தெரிவித்தார்.
 

Leave a Reply