• Welcome to TamilsGuide
செய்திகள் 1

78 ஆண்டுகளுக்குப் பின்னர் மின்சாரம் கிடைத்த கிராமம்

ராஜஸ்தானின் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளுக்குப் பின்னர், மின்சாரம் கிடைத்திருக்கிறது.

ராஜஸ்தானில் பரன் மாவட்டத்தில், பழங்குடியினர் வாழும் மலைக்கிராமத்தில், நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மின்சார வசதி வழங்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்த கிராமத்தில் 200 பேர் வசிப்பதாகவும் அவர்களுக்கு மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்துத் தருமாறும் அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் பிரதமரினால் அக்கிராம மக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 

Leave a Reply