• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தலைவன் தலைவி படத்தின் 2ஆவது பாடல் வெளியானது

சினிமா

'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டுள்ளது.

இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.

மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் ஆகாச வீரன் என்ற 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply