லோகேஷ் கனகராஜ் மீது கோபத்தில் இருக்கும் சஞ்சய் தத்
சினிமா
பிரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள 'கே.டி. தி டெவில்' திரைப்படம் விரைவில் வெளியாகிறது. சென்னையில் நடந்த பட விழாவில் பிரபலங்கள் பங்கேற்று இருந்தனர்.
அப்போது சஞ்சய் தத் பேசும்போது, ''ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரை எனக்கு மிகவும் பிடிக்கும். லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். என் கதாபாத்திரத்தை 'லியோ' படத்தில் அவர் முடித்துவிட்டார். என் திறமையை வெளிப்படுத்தும் விதமான காட்சிகள் இல்லை. எனவே இனி அவர் படத்தில் (எல்.சி.யூ.வில்) நடிப்பேனா? என்று எனக்கு தெரியவில்லை'', என்றார்.
சஞ்சய் தத் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






















