கொழும்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் – லொறி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
இலங்கை
மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (11) பிற்பகல் , கல்கிஸ்ஸ பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ ஸ்ரீ தர்மானந்த மாவத்தையைச் சேர்ந்த 75 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






















