• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செம்மணி விவகாரம் - ஜனாதிபதிக்கு இலங்கை தமிழரசுக் கட்சி கடிதம்

இலங்கை

செம்மணி மனிதப் புதை குழி சம்பந்தமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இன்று (11) கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அந்த கடித்தில், நடந்து வரும் செம்மணிப் புதைகுழி விசாரணையில் உண்மை, நீதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ITAK வலியுறுத்தியுள்ளது.

மூன்று பக்கங்களைக் கொண்ட விரிவான கடிதத்தில், யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுக்கும் செயல்முறை குறித்து ITAK கவலைகளை தெரிவித்துள்ளது.

இதுவரை 65க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வலியுறுத்தியதுடன், இது இப்பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களை எடுத்துக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், தடயவியல் வெளிப்படைத்தன்மை, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல் மற்றும் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடருதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் கடிதம் வலியுறுத்துகிறது.

அதேநேரம், அனைத்து தடயவியல் அறிக்கைகள் மற்றும் உடற்கூற்று பரிசோதனைகளையும் பொதுவில் வெளியிட வேண்டும் என்றும் கடிதம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தக் கடிதத்தில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
 

Leave a Reply