• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர், சிவாஜி எனும் இரு மலைகளுக்கு இடையில் பிரகாசித்த சூரியன்

சினிமா

1960 முதல் தமிழ் சினிமா வரலாற்றில் இரு பெரும் சாம்ராஜ்யங்கள் இருந்தது. ஒன்று எம்.ஜி.ஆர் மன்றொன்று சிவாஜி. பல வெள்ளிக் கிழமைகள், குறிப்பாக பண்டிகை நாட்களில் இவர்கள் படங்கள் மோதும். எம்.ஜி.ஆர் ஆக்ஷனிலும், சிவாஜி நடிப்பிலும் கலக்கி பாக்ஸ் ஆபீசுகளை கலக்கி கொண்டிருந்த நேரத்தில் புதுமுகங்களை வைத்து சிறுபடங்களை இயக்கி அவர்களுக்கு நிகரான வெற்றிகளை கொடுத்து ஆச்சர்யப்படுத்தியவர் கே.பாலச்சந்தர்.

அவர்கள் காலத்திலேயே ரஜினி, கமல் போன்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களோடு போட்டியிட வைத்தவர். அதீத நடிப்பு, சென்டிமெண்ட் ஏரியா சிவாஜியுடையது. லாஜிக் இல்லாத ஆக்ஷன் மேஜிக் எம்ஜிஆர் உடையது. இருவருமே கே.பாலச்சந்தரின் யதார்த்த சினிமாவை பார்த்து வியந்து, அவருக்கு வழிவிட்டனர்

இருவருடனும் கே.பாலச்சந்தர் அதிகமாக பணியாற்றவில்லை என்றாலும் சிவாஜி நடித்த 'எதிரொலி' என்ற படத்தை மட்டும் கே.பாலச்சந்தர் இயக்கினார். எம்ஜிஆர் நடித்த 'தெய்வத்தாய்' படத்திற்கு வசனம் எழுதினார்.

இயக்குனர் சிகரம் அல்லவா!

தினமலர். காம்

Leave a Reply