• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த வேன்! 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை

மாத்தறையிலிருந்து, நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, இன்று அதிகாலை  வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில், நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில், இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி, நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நானுஓயா பொலிஸார்  தெரிவித்தனர்.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாகவே, வேன் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்துள்ளதாக  முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply