கனடாவில் பெண்களை ட்ரோன் மூலம் படம் பிடித்தவருக்கு வழக்கு
கனடா
கனடாவில் இரண்டு பெண்களை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக நபர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் குடியிருப்புக்களில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் இவ்வாறு ட்ரோன் கமரா மூலம் படமெடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 1ம் திகதி பெவர்லி மற்றும் குயின்ஸ் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கடந்த மார்ச் மாதம் 18ம் திகதி கைது செய்திருந்தனர்.
32 வயதான கிரஹம் கெலி என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு ட்ரோன்கள் மூலம் எவரேனும் படம் பிடிக்க முயற்சித்தால் தகவல்களை திரட்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்றுமாறு கோரப்பட்டுள்ளது.





















