விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகளுக்கு பிணை
இலங்கை
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விஷேட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (10) குறித்த நபரை 500,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் 21 வயது பெண், வாழைத்தோட்டம் பொலிஸாரால் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் சார்ந்த தனியார் நிறுவனம் மூலம் ரூ.50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை ரூ.175,000க்கு நோயாளிகளுக்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






















