• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பூஸ்ஸ சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட 08 தொலைபேசிகள் அடங்கிய பொதி கண்டுபிடிப்பு

இலங்கை

பூஸ்ஸ சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட எட்டு கையடக்க தொலைபேசிகள் அடங்கிய பொதியொன்றை இன்று (08) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பணியில் இருந்தபோது, ​​சிறைச்சாலை வளாகத்திற்குள் ஒரு பொருள் வீசப்படுவதைக் கவனித்ததாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

குறித்த சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் விசேட பிரிவு பிரிவுக்கு அருகில் கருப்பு பொதியில் 8 கையடக்கதொலைபேசிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply