பின்லாந்தில் நடைபெற்ற மனைவிகளை கணவர்கள் சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி
மனைவிகளை கணவர்கள் சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி பின்லாந்தில் நடைபெற்றுள்ளது.
இப்போட்டியில் மனைவியை சுமந்தபடி மணல் மற்றும் நீரால் அமைக்கப்பட்ட தடைகளை தாண்டி கணவர் முன்னேறி சென்று வெற்றி பெறவேண்டும். வெற்றி பெறுபவருக்கு அவரின் மனைவியின் எடைக்கு நிகரான பீர் பரிசாக அளிக்கப்படும்.
200 பேர் கலந்து கொண்ட இப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த செலாப் - ஜஸ்டின் ரூஸ்லர் இணை முதல் பரிசை வென்றுள்ளனர்.






















