• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குபேரா படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்

சினிமா

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா நாலை நடைப்பெற இருக்கிறது. படத்தின் செகண்ட் சிங்கிளின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. செகண்ட் சிங்கிள் வரும் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது.
 

Leave a Reply