முதன்முதலாக முத்தக் காட்சியில் நடிப்பதால் டென்ஷனில் டேக்குகளை எண்ணவில்லை.- ருத்ரா
சினிமா
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. படத்தின் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ளார். கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார்.
மேலும் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்திருக்கின்றனர்.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வருகிற ஜூலை மாதம் படம் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுக நடிகர் ருத்ரா பேசியதாவது:-
படத்தில் கதாநாயகியுடன் 3 லிப் லாக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. முதன்முதலாக முத்தக் காட்சியில் நடிப்பதால் டென்ஷனில் டேக்குகளை எண்ணவில்லை.
விஷ்ணு விஷால் பேசியதாவது:-
இந்தப் படத்தின் கதையை கேட்டதும் நான் உடனடியாக சம்மதித்தேன். நானும் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். இந்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் எனக்கு அமையவில்லை. ஆனால் என் தம்பிக்கு முதல் படத்திலேயே முத்த காட்சி அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.























