பள்ளிப்படிப்பை முடித்த சூர்யா - ஜோதிகா மகள் தியா... புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
சினிமா
நட்சத்திர காதல் தம்பதிகளான சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
அவர்களின் மகள் தியா (18), மகன் தேவ் (15) ஆகியோர் மும்பையில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் தியா தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். தியாவின் பட்டமளிப்பு விழாவில் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோவை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.























