எனக்கு முக்கியமான நாள் - திருமண கோலத்தில் ஸ்ரீ லீலா - ரசிகர்கள் அதிர்ச்சி!
தெலுங்கு சினிமாவின் இளம் நாயகி ஸ்ரீலீலா இளைஞர்கள் மத்தியில் தற்போதைய சென்ஷேசன். 23 வயதாகும் இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். சிவகார்திகேகேயனின் பராசக்தி படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். இதற்கு மத்தியில் குழந்தைகளைத் தத்தெடுத்து ஸ்ரீலீலா வளர்ந்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீலீலா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பலரையும் புருவம் உயர்ந்த வைத்துள்ளது.
இந்தப் புகைப்படங்கள் ஸ்ரீலீலா மணப்பெண் அலங்காரத்தில் இருப்பதையும், சிலர் அவரது கன்னங்களில் மஞ்சள் தடவுவதையும் காட்டுகின்றன.
கூடுதலாக, "இன்று எனக்கு ஒரு பெரிய நாள். விரைவில் முழு விவரங்களையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், விரைவில் வருகிறேன்" என்று ஸ்ரீலீலா பதிவிட்டுள்ளதால் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. இது ஸ்ரீலீலா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது.























