• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மணி ரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் இணையும் சிம்பு

சினிமா

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கமல்ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று சொன்னது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் சிம்பு மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கன்னட நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ருக்மினி வசந்த் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் மணி ரத்னம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு STR 49, STR 50, STR 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply