தெலுங்கானாவின் கவுரவ விருதை வென்ற அல்லு அர்ஜுன்
சினிமா
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி பெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இதுவரை அதிகம் வசூலித்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் புஷ்பா 2 இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா கௌரவ விருதான கட்டார் விருதை அல்லு அர்க்ஜுன் வென்றுள்ளார். அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கானா அரசுக்கும், படத்தின் இயக்குநர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.























