நாடு திரும்பிய தமிழ் அகதி யாழ். விமான நிலையத்தில் கைதானமை குறித்து சுமந்திரன் கேள்வி
இலங்கை
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் (UNHCR) அலுவலகத்தால் “அகதி” என்று சான்றளிக்கப்பட்ட ஒரு நபரை யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் திரும்பியதும், குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர்,
75 வயதான அகதி, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்தும் தேவையான சகல அனுமதிகளையும் பெற்று இந்தியாவில் உள்ள ஒரு முகாமில் இருந்து திரும்பியதாகவும், UNHRC ஆல் அவர் திரும்பி வர உதவி செய்யப்பட்டது.
எவ்வாறெனினும், அனைத்து அனுமதி மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் இருந்தபோதிலும், நேற்று பலாலி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
பின்னர் அவர், இன்று காலை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யினரால் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், பிணைக்கான கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்த பின்னர் ஜூன் 05 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் சுமந்திரன் கூறினார்.
அதேநேரம், நாடு திரும்பி வருவதற்கு பதிவு செய்துள்ள 10 ஆயிரம் பேரை அச்சுறுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையா இது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.






















