• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரற்ற காலநிலை - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை

இலங்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள அனைத்து உள்நாட்டு போட்டிகளையும் ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, மேஜர் கிளப் T20 போட்டி, டயர் ‘பி’ ரி20 போட்டி மற்றும் கவர்னர்ஸ் கிண்ணம் ஆகியவை ஒத்திவைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருத்தப்பட்ட அட்டவணைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும்  இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply