சைபர் தாக்குதல் குறித்து ஓய்வூதிய திணைக்களத்தின் அறிவிப்பு
இலங்கை
ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் அமைப்புகள் மீதான சைபர் தாக்குதலில் எந்த தரவும் சேதமடையவோ அல்லது அழிக்கப்படவோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு ஆன்லைன் தகவல் அமைப்பும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சைபர் தாக்குதலை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வுத்தியத் திணைக்களம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் திணைக்களம் தகவல் அமைப்புகளை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சைபர் தாக்குதலைத் தொடர்ந்து ஓய்வூதியத் திணைக்களம் தகவல் அமைப்புகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டபோது எந்தத் தரவும் திருடப்படவில்லை அல்லது இழக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்த சைபர் தாக்குதல் தொடர்பாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றத்துடன் இணைந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.






















