ஹரி ஹர வீரமல்லுவில் பவன் கல்யாணுக்கு நான் தான் ஹீரோயின் - சத்யராஜ் கலகல பேச்சு
சினிமா
பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் அப்படத்தின் கதாநாயகி நிதி அகர்வால், நடிகர்கள் சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், "இந்த படத்தில் உண்மையான ஹீரோயின் நிதி அகர்வால் இல்லை. நான் தான் இந்த படத்தின் ஹீரோயின். எப்போதுமே படத்தில் ஹீரோவின் வேலை என்ன ஹீரோயினை காப்பாற்றுவது. இந்த படத்தில் பவன் கல்யாண் என்னை தான் காப்பாற்றுகிறார், அப்போ நியாயமா பார்த்தா நான் தானே ஹீரோயின்" என்று கிண்டலாக தெரிவித்தார்.






















