• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள சிறப்பு சலுகை

கனடா

கனடாவில்(Canada) மாகாண நியமனத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட புலம்பெயர் பணி அனுமதி உள்ளவர்களுக்கு தற்காலிக குடியுரிமை அந்தஸ்தை நீட்டிப்பதற்கான கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிராந்திய பொருளாதார குடியேற்றத் திட்டங்கள், நாட்டின் நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிக்கும் முகமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த தற்காலிக நடவடிக்கையானது, கனடாவின் மானிடோபா மாகாணத்தினால் முதலில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட 6,700 தற்காலிக பணியாளர்களை மாகாண நியமனத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை மாகாணம் செயல்படுத்தும் போது தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், 2 ஆண்டுகளுக்குள், தகுதியான புலம்பெயர்ந்தோர் என அடையாளம் காணப்படும் பட்சத்தில் அதிகாரப்பூர்வ நியமனத்தைப் பெற்று இறுதியில் நிரந்தர குடியிருப்பாளர்களாக மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களாக இருப்பவர்களின் சதவீதத்தை குறைக்கும் அதே வேளையில் நிரந்தர குடியேற்றத்தை உறுதிப்படுத்த IRCC(குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு - கனடா) உறுதிபூண்டுள்ளது.

இந்த நடவடிக்கை மனிடோபா மாகாணத்திற்கு பொருந்தும் எனவும் , தற்போதைய தற்காலிக குடியிருப்பாளர்களில் பெரும்பகுதியை நிரந்தர குடியிருப்புக்கு மாற்றுவதற்கும் அவர்களின் தொழிலாளர் சந்தை தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் பிற மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் விருப்பங்களை ஆராய ஐஆர்சிசி நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply