• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியா- தென்கொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இரு நாட்டு படைகளும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் வடகொரியா ஆத்திரமடைந்துள்ளது.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிடிக்ஸ் ஏவுகணை, நீருக்கடியில் அணு ஆயுத சோதனை என பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் வடகொரியா புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் பியோல்ஜி-1-2 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது. குறிப்பிட்ட இலக்கை நோக்கி இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் இந்த சோதனை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 

Leave a Reply