• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜி எதிரே வசனத்தை மறந்து அழுத சரோஜாதேவி - நடிகர் திலகம் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

சினிமா

சரோஜா தேவி 1956-ம் ஆண்டு வெளியான திருமணம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

சிவாஜியுடன் எதிரில் நின்று வசனம் பேச முடியாமல் சரோஜா தேவி அழுத நிலையில், அவரை தேற்றுவதற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படக்குழுவினர் அனைவரையும் திட்டி தீர்த்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் முக்கியமானவர் சரோஜா தேவி. எம்.ஜி.ஆர். சிவாஜி தொடங்கி இன்றைய காலக்கட்ட நடிகர்களான விஜய் சூர்யா உட்பட பல நடிகர்கள் படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி 1956-ம் ஆண்டு வெளியான திருமணம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். கடைசியாக தமிழில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஆதவன் படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே 1963-ம் ஆண்டு வெளியான இருவர் உள்ளம் படத்தில் சிவாஜியுடன் இணைந்து சரோஜா தேவி நடித்திருந்தார். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்திற்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். எல்.வி.பிரசாத் இயக்கிய இந்த படத்திற்கு கருணாநிதி திரைக்கதை எழுதியிருந்தார். எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராமச்சந்திரன், கே.பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தில் நடிக்கும்போது நடந்த சுவாரஸ்யமாக தகவல் ஒன்றை நடிகை சரோஜா தேவி பகிர்ந்துள்ளார்.  நானும், சிவாஜி கணேசனும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறோம். அந்த படங்களில் என் நடிப்பு சிறப்பாக இருந்தது என்றால் அதற்கு காரணம் நடிகர் திலகம் தான். அவரின் இருவர் உள்ளம் படத்தில் நான் நடித்திருந்தேன். இந்த படத்தில் அவர் ஒரு ப்ளே பாயாக நடித்திருப்பார்.

இந்த படத்தின் ஒரு காட்சியில் என்னை பார்த்து எனக்கென்ன படிப்பில்லையா? பணமில்லையா, அழகில்லையா நீ ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குற என்று கேட்பார். அவர் கேட்ட அந்த ஸ்டைலில் மயங்கி நான் என் டைலாக்கை மறந்துவிட்டேன். அதன் பிறகு ஒரு ரீடேக் ஆச்சு, அடுத்து 2-வது ரீடேக் ஆனதும். காட்சி சரியாக வரவில்லை என்பதால், நான் அழ ஆரம்பித்துவிட்டேன். 

நான் அழுதா நிறுத்த மாட்டேன் என்று நடிகர் திலகத்திற்கு தெரியும். அதனால் அவர் சரோஜா நல்லதான் நடிச்சா நீதான் சரியா படம் பிடிக்கல என்று கூறி கேமரா மேனையும், லைட் மேனையும் சத்தம்போட்டார். அதன்பிறகு என்னை தேற்றி மீண்டும் ஒரு டேக் எடுத்தார்கள். நீ அழகில் மன்மதனாக இருக்கலாம். பணத்தில் குபேரனாக இருக்கலாம். படிப்பில் மேதையாக இருக்கலாம். இந்த மூன்றையம் காக்க கூடிய கண்ணியம் உள்ளிடத்தில் இல்லை என்ற டைலாக்கை சொன்னேன். இந்த டைலாக்கை சொன்னவுடன் அவர் என்னை பாராட்டினார் என கூறியுள்ளார்.
 

Leave a Reply