• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அறிஞர் அண்ணா,அரசியல் பண்பாட்டின் அடையாளம்!

சினிமா

தன்னை அநாகரிகமாக திட்டுபவர்களைக் கூட, தனது சாதுர்யமான பேச்சாற்றலால் வெட்கப்படும்படியாக தலைகுனிய வைத்தவர்.

1957ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 152 இடங்களைப் பிடித்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.திமுக வெறும் 13 இடங்களை மட்டுமே பிடித்தது.50இடங்களில் டிபாசிட்டை இழந்தது.இந்த தோல்வியைக் குறிப்பிட்டு காங்கிரஸார் இவரையும் திமுகவையும் கிண்டலும் கேலியும் செய்தனர்.இவர், பதிலுக்கு வார்த்தைப் போர் எதுவும் வெடிக்காமல் தனக்கே உரிய பாணியில் பேசினார்.

"நாங்கள் இன்னும் வெட்கப்படும்படியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து எங்களைத் திட்டி அவமானப்படுத்துங்கள்.நீங்கள் பேசும் அந்த வார்த்தைகளே எங்களுக்கு உரமாக அமையும்.

'50 இடங்களில் டிபாசிட்டை பறிகொடுத்தவர்களே',என்று அழையுங்கள்.அதுதான் எங்களை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி செயலாற்ற உதவும்."என்றார்.

எப்படியொரு பேச்சுப் பாருங்கள்.இவருடைய இந்தப் பேச்சைக் கேட்டவுடன், காங்கிரஸ் அதோடு வாயை மூடிக்கொண்டது.

'தமிழ்நாடு',என பெயர் சூட்டி நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்தவர்

மதராஸ் மாநிலத்தை, 'தமிழ்நாடு',என பெயர் மாற்றவேண்டும் என வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் காங்கிரஸ் ஆட்சியின்போது 76 ஆட்கள் உண்ணாவிரதமிருந்து இறந்தார்.கடைசி வரையில் அவருடைய கோரிக்கைக்கு காங்கிரஸ் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

1967ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார்.1968ஆம்  ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி, 'மதராஸ்', மாநிலத்திற்கு ,'தமிழ்நாடு',என பெயர் சூட்டப்பட்டு சங்கரலிங்கனாரின் கனவை நனவாக்கினார்.

தனது கட்சியின் எதிர்முகாமைச் சேர்ந்தவரின் உயிருக்கு மதிப்பளித்து, அவருடைய கோரிக்கையை நிறைவேற்றி மகிழ்ந்தார்.இந்த அரசியல் பண்புக்குப் பெயர்தான்,'அண்ணா'.

இந்தியாவிலேயே நாடு எனும் பெயர் தாங்கி நிற்கும் மாநிலம் நம் மாநிலம் மட்டுமே!

இந்த பெருமைக்கு அண்ணாவும்,சங்கரலிங்கனார் அவர்களுமே காரணம்!

அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று!

சே மணிசேகரன்

Leave a Reply