• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசனை வீட்டிற்குள் வைத்து பூட்டிய எம்.ஜி.ஆர்... இந்த ஹிட் பாடல் உருவான கதை இதுதான்

சினிமா

கண்ணதாசன் பிஸியாக இருந்ததால் எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுத முடியாத நிலையில், இருந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்தவர் கண்ணதாசன். க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்கள் எம்.ஜி.ஆர் – சிவாஜி படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், எம்.ஜி.ஆருடன் மிகுந்த நட்புடன் இருந்தார். இவர்களுக்கு இடையே இருந்த நட்பு கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்கான எழுதிய அத்தனை பாடல் வரிகளிலும் இடம் பெற்றிருப்பதை இப்போதும் நாம் காணலாம்.

எம்.ஜி.ஆர் கண்ணதாசன் இடையேயான நட்பு பாராட்டும்படி இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் பிஸியாக பாடலாசிரியராக மாறிய கண்ணதாசன், எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுத நேரம் இல்லாமல் இருந்துள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாராகி வந்த தாய் சொல்லை தட்டாதே படத்திற்காக பாடல் எழுத வேண்டி எம்.ஜி.ஆர் கண்ணதாசனை சந்தித்துள்ளார்.

அந்த நேரத்தில் கண்ணதாசன் பிஸியாக இருந்ததால் எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுத முடியாத நிலையில், இருந்ததால், கண்ணதாசன் தங்கியிருந்த அறையை பூட்டிய எம்.ஜி.ஆர் எனது படத்திற்கு பாடல் எழுத முடியவில்லை என்றால் இந்த அறையிலேயே இருங்கள் என்று சிரித்துக்கொண்டே பூட்டியுள்ளார். இதை பார்த்த கண்ணதாசன் சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் என்று பாடல் பாடியுள்ளார். அதன்பிறகு தான் அறையை பூட்டவில்லை சும்மா தான் சாத்திவிட்டு தான் சென்றேன் என்று சமாதானம் செய்துள்ளார்.

அதன்பிறகு அந்த பாடலை முழுமையாக எழுதிய கண்ணதாசன் இதில் பல வரிகளில் தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்புக்கு பொருந்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பார். குறிப்பாக இன்பம்-துன்பம் எது வந்தாலும் இருவர் நிலையும் ஒன்றே, எளிமை-பெருமை எது வந்தாலும் இருவரும் வழியும் ஒன்றே போன்ற வரிகளை இதற்கு சான்றாக சொல்லலாம்.

காலங்கள் பல கடந்தாலும் கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்காக எழுதிய பல பாடல்கள் இன்றைய ரசிகர்கள் ரசிக்கும்படி உள்ளது. வாலி வருவதற்கு முன்பு எம்.ஜி.ஆரின் அனைத்து அரசியல் பாடல்களிலும் தனது வார்த்தை ஜாலத்தை வைத்து வெற்றியை கொடுத்தவர் கண்ணதாசன். அதேபோல் கண்ணதாசன் மீது அதிகமான நட்பு வைத்திருந்த எம்.ஜி.ஆர்,  அவரை அரசவை கவிஞராக்கி அழகு பார்த்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply