• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக் பற்றி - சுஜாதா (1993)

சினிமா

கோவை ரோட்டரி கூட்டம் முடிந்ததும் சேரன் டவர்ஸ் மாடியில் எல்லோரும் பிளேட் நூறு ரூபாய் விருந்து சாப்பிட்டுக் கொண்டே நாட்டில் ஏழ்மையை ஓட்டுவது எப்படி எனப் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி என்னிடம் வந்து, " மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்கு என்னன்னு சொல்லிடுங்கோ" என்றார். எனக்குத் திகைப்பாக இருந்தது. "அந்தமாதிரி ஒரு ஜோக்கே இல்லைங்க; அது ஒரு மாயை" என்று சமாளித்ததை அவர் நம்பவில்லை.
மீண்டும் மெக்ஸிகோ வருவோம். அந்த ஜோக்கை இன்று (1993-ல்) வெளியிட இயலாத அனுமதி நிலையில் இருக்கிறோம்.
இன்றைய நிலையில் வஸந்த் சொன்ன ரக்பி (Rugby) ஜோக்கை கீழ்வரும் முறையில்தான் வெளியிட முடியும்.
புதிதாக கல்யாணம் ஆன பெண், லேடி டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்தாள். அவளுக்கு இரண்டு முழங்கால்களிலும் சிராய்த்து போல சிவப்பாக கன்னிப் போயிருந்தது.

"இந்த மாதிரி கேஸ் நான் பார்த்ததே இல்லை. எப்படியம்மா இப்படி ஆச்சு?
"அது வந்து....போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு."
டாக்டர், "ஓ, புரியுது. உன் புருஷன் வந்திருக்காரா?"
"ஆம். ரூமுக்கு வெளியே காத்திருக்கார்."
"கூப்டு அந்தாளை"
உள்ளே வந்த இளம் கணவனிடம் டாக்டர், "பாருப்பா, இப்படி மட்டும் இல்லை. வேறு எத்தனையோ முறைகள் இருக்கு. இந்த புஸ்தகத்தைப் பாரு. இதெல்லாம் தெரியாதா உனக்கு?"
"தெரியும் டாக்டர். ஆனா ரெண்டு பேருமே டிவி பார்க்கணும்னா இதைவிட்டா வேறு முறை இருக்குதா சொல்லுங்க."
இந்த ஜோக் உங்களுக்குப் புரிந்திருந்தால் உங்களுக்கு எவ்வித சென்ஸாரும் தேவையில்லை. மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக் இதைவிட Aறு மாறானது.அதற்கு இன்னும் வேளை வரவில்லை.

Ram Sridhar
 

Leave a Reply