• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தட்டம்மை தடுப்பூசி தொடர்பில் அறிவிப்பு

இலங்கை

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை 6 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று, 6 முதல் 9 மாதங்களுக்கு இடையிலான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு பெற்றோருக்கு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
 

Leave a Reply