• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மறக்க முடியுமா பஞ்சு அருணாசலம் என்ற பண்பாளரை...

சினிமா

திருமண வீடுகளில் இன்றும் ஒலிக்கும் ‛‛மணமகளே மருமகளே...''இவர் முதன்முதலில் பாட்டு எழுதியது 1960-ல் வெளிவந்த ‛நானும் மனிதன் தான்', 1961-ல் கண்ணதாசனின் அண்ணன் தயாரிப்பில் வெளிவந்த ‛சாரதா' படத்தில் கேவி மகாதேவன் இசையில் வெளிவந்த ‛‛மணமகளே மருமகளே வா வா...'' பாடல் இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.
எம்ஜிஆருக்கு ‛பட்டுக்கோட்டை' கல்யாண சுந்தரம் ஸ்டைலில் பாட்டெழுதியவர்எம்ஜிஆருக்காக இவர் எழுதிய முதல் பாடல் ‛கன்னித்தாய்' படம். கேளம்மா சின்னப்பொண்ணு கேளம்மா என்று கட்டட தொழிலாளர்களின் நிலையை எடுத்து சொல்வது போன்று எழுதியிருப்பார். ஏழைக் குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறாய் ஓடணும் என்று எழுதியிருப்பார். எம்ஜிஆருக்கு ‛பட்டுக்கோட்டை' கல்யாண சுந்தரம் ஸ்டைலில் பாட்டெழுதியவர் இவர். கலங்கரை விளக்கம் பாடல் முழுக்க இவர் எழுதியது தான். இப்படத்தில் இடம்பெற்ற ‛பொன் எழில் பூத்தது புதுவானில்...', ‛என்னை மறந்தது ஏன் தென்றலே...', உள்ளிட்ட எல்லா பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.

முன்னணி நடிகர்களுக்கு பாடல் எழுதியவர்
எம்.ஜி.ஆரை தொடர்ந்து சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் வரிகள் எழுதியிருக்கிறார். 
சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதியிருக்கிறார்.
இளையராஜாவை அறிமுகம் செய்தவர்‛அன்னக்கிளி' படத்தில் இசைஞானி இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம் தான். அந்தப்படத்தில் இடம்பெற்ற ‛‛மச்சானை பார்த்தீங்களா...'' பாடல் இவர் எழுதி, இளையராஜா இசையமைத்தது தான். இந்தப்பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து சூப்பர் ஹிட்டானது. 
காரைக்குடியில் உள்ள சிறுகூடல்பட்டி பஞ்சு அருணாசலத்தின் சொந்த ஊர். கவியரசு கண்ணதாசன் இவரது சித்தப்பா. கண்ணதாசனின் உதவியாளராக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் பஞ்சு அருணாசலம். விரைவிலேயே அவர் திரைப்படங்களுக்க பாடல்கள் எழுத ஆரம்பித்தார். கலங்கரை விளக்கம் படத்தில் அவர் எழுதிய, பொன்னெழில் பூத்தது புதுவாழ்வில்... பாடல், அது வெளியான காலத்தில், கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் என்றே பலரும் நினைத்தனர். வார்த்தை வளமும், மொழியின் செழுமையும் ஒன்றாக கலந்த அற்புதமான பாடல் அது.
பஞ்சு அருணாசலம் இயற்றிய அனைத்துப் பாடல்களுமே சிறப்பானவை, கண்ணியம்மிக்கவை. காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்... என்ற தம்பிக்கு எந்த ஊரு பாடலாகட்டும், கண்மணியே காதல் என்பது கற்பனையோ.. என்ற ஆறிலிருந்து அறுபதுவரை பாடலாகட்டும், அனைத்துமே என்றும் நிலைத்து நிற்கும் அழுத்தமான உணர்ச்சியும் வார்த்தை பிரயோகமும் கொண்டவை.
தமிழ் சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து, அச்சுத் துறையில் சேர்ந்து, கண்ணதாசனின் உதவியாளராக இருந்து, பிறகு திரையுலகில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்து, இனிவரும் திரைக் கலைஞர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்பவர் பஞ்சு அருணாசலம். 
பஞ்சு அருணாசலம், தமிழ் சினிமாவின் இசை ரசிகர்களுக்காக இளையராஜாவைக் கொண்டுவந்தவர் என்றே அடிக்கோடிட்டு அறியப்படுகிறார். இதுமட்டுமே அவர் சாதனை அல்ல, சிறந்த பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், கதையாசிரியர், திரைக்கதை வடிவமைப்பாளர் என, திரையின் பல பிம்பங்களில் தன்னை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக்கொண்டவர். அதேநேரம், தன்னைப் பற்றியும் தன் செயல்களைப் பற்றியும் ஒருபோதும் விளம்பரம் செய்துகொள்ளாதவர். தமிழ் சினிமாவில் கமர்ஷியலாக வெற்றிபெற்ற பல படங்களின் படைப்பாளியாக இருந்து, சத்தமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தியவர்.
கல்லூரிக் காலத்தில் அப்பாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மெட்ராஸுக்கு ரயில் ஏறி, தன் பெரியப்பாவிடம் செட் அசிஸ்டென்ட்டாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, தன் சித்தப்பா கண்ணதாசனிடம்  பாடல் எழுதும் உதவியாளராகப் பணிபுரிந்தார். `தென்றல்' பத்திரிகையில் `அருணன்' என்ற புனைபெயரில் எழுதினார். உறவினர்கள் சினிமாவின் பல்வேறு துறைகளில் இருந்தும்கூட, மிகச் சாதாரணமாக அவர் தன்னை முன்னிறுத்திக்கொள்ளவில்லை. கண்ணதாசனின் சிந்தனைகளுக்கு எழுதுகோலாக இருந்து, திரைத்துறையைக் கற்றவர்.
அவரின் எழுத்துத் திறமைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைத் திறம்படப் பயன்படுத்துவதில் வல்லவரான பஞ்சு அருணாசலம், ஆகச் சிறந்த பாடல் ஒன்றை எழுதினார். அதுதான் இன்றும் நம் வீட்டுத் திருமணங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் `மணமகளே மருமகளே வா வா...' பாடல். தமிழ் திரையுலகின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக விளங்கிய இந்தப் பாடலுக்குப் பிறகு, திரை வாய்ப்புகள் அவரை வாரி அணைத்துக்கொண்டன. அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் பெருங்கவிஞர்களின் மொழியாளுமைக்கு எந்த வகையிலும் குறைவில்லாதவை. 
பாடலாசிரியராக அவர் அடைந்த வெற்றி, கதை இலாகாவில் அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் எழுதிய கதைகள் திரைப்படங்களாவதில் பல தடைகள் ஏற்பட்டன.  தடைகளைத் தாண்டி உருவான சில படங்கள், வெளியாகவில்லை. 
பன்னிரண்டு ஆண்டுகள் தொடர் தோல்விகளையே சந்தித்தார். 
தன் விடாமுயற்சியால் அவர் வெற்றிபெற ஆரம்பித்தார். அவரது வெற்றி, சுயநலம் சார்ந்த வெற்றியாக இல்லாமல் தமிழ் சினிமாவில் நிறைய புதுமைகளுக்கு வித்திட்டது. 1970-களில் இந்திப் பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஆதிக்கம் செலுத்தி வந்த சமயத்தில், `அன்னக்கிளி' என்ற திரைப்படத்துக்காக திரைக்கதை - வசனத்துடன் அனைத்து பாடல்களையும் எழுதினார். மேலும், இந்தப் படத்தின் மூலம் இளையராஜாவை அறிமுகப்படுத்தி புதிய அலையைத் தோற்றுவித்தார். `பாபி', `ஆராதனா', `ஷோலே'  போன்ற படங்களின் பாடல்கள் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்த நேரத்தில் பஞ்சு அருணாசலத்தின் வரிகளில் `மச்சானப் பாத்தீங்களா...' பாடலும், மண் மனம் கமழும் இசையும் தமிழ் திரையுலகை ஆக்கிரமிக்கத் தொடங்கின.
தமிழ் சினிமாவில் பஞ்சு அருணாசலம் ஏற்படுத்திய இன்னொரு முக்கியமான நகர்வு, ரஜினியின் பிம்பத்தை மாற்றியது. ரஜினி என்றாலே, ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது, வேகமான உடல்மொழி என்பதைத் தாண்டி, ரஜினியால் மிகச்சிறந்த நடிகராகவும் பரிமளிக்க முடியும் என்பதை நிரூப்பித்தவர்களில் பஞ்சு அருணாசலமும் முதன்மையானவர். தான் கதை எழுதி 1977-ம் ஆண்டு வெளிவந்த  `புவனா ஒரு கேள்விக்குறி' படத்தின் மூலம் ரஜினியை இன்னொரு தளத்துக்குக் கொண்டுபோனார்.  ரஜினியால் இன்னும் சிறப்பாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட படம்தான் `ஆறிலிருந்து அறுபது வரை'. கலைஞர்களுக்கு ஏற்ப கதைகளை உருவாக்குவதில் தேர்ந்தவன் என்பதை நிரூபிக்கும் வகையில், கமர்ஷியலான கதை அமைப்பில் கமல்ஹாசன் நடித்து வசூல் சாதனை படைத்த படம்தான் `சகலகலா வல்லவன்'
ரஜினி, கமல்  இருவரும் இன்றைய தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக திகழ்வதற்கு, இவர் எழுதிய கதை, திரைக்கதை, வசனங்களும் ஒரு காரணம். உதாரணங்களாக, `ஜப்பானின் கல்யாணராமன்', `மனிதன்' , `உயர்ந்த உள்ளம்', `அபூர்வ சகோதரர்கள்', `தர்மத்தின் தலைவன்', `குரு சிஷ்யன்', `ராஜாதி ராஜா', `ராஜா சின்ன ரோஜா'... எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தத் திரைப்படங்களை இன்றைக்குப் பார்த்தால்கூட சுவாரஸ்யம் குன்றாமல் நம்மால் ரசிக்க முடிவதற்கு பஞ்சு அருணாசலம் எழுதிய கதையம்சமே காரணம். 
இவருக்கு மீனா என்கிற மனைவியும், சண்முகம், சுப்பிரமணியம் என்கிற இரு மகன்களும், கீதா, சித்ரா என்கிற இருமகள்களும் உள்ளனர். இதில் சுப்பு என்கிற சுப்பிரமணியம், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணனாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
திறமையும், பணிவும் ஒரேயிடத்தில் இருப்பது அரிது. அந்த இரண்டும் கலந்த அற்புத மனிதர் திறமையாளர் பஞ்சு அருணாசலம்.

ஆறுமுகம் தாரமங்கலம் சேலம்
 

Leave a Reply