• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய வேலை வாய்ப்புகளை புலம்பெயர் மக்களிடம் இழந்த பிரித்தானியர்கள்

பெரும்பாலானவை ஐரோப்பியர்கள் அல்லாத புலம்பெயர் மக்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டில் பிரித்தானியாவில் ஐந்தில் மூன்று புதிய வேலை வாய்ப்புகளை பிரித்தானியர்கள் இழந்துள்ளதாகவே ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது மொத்தமாக 420,066 வேலை வாய்ப்புகளை ஐரோப்பியரல்லாத வேறு நாடுகளில் இருந்து புலம்பெயந்த மக்கள் கைப்பற்றியுள்ளனர்.
  
டிசம்பர் 2021 முதல் டிசம்பர் 2022 வரை பிரித்தானியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை 681,939 என அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் பிரித்தானியாவில் பணிபுரிந்த அனைத்து புதிய ஊழியர்களில், 62 சதவீதம் பேர் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றே தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, வெறும் இரண்டு ஆண்டுகளில், ஊதியத்தில் உள்ள ஐரோப்பியர்கள அல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக உயர்ந்துள்ளது. டிசம்பர் 2020ல் பிரித்தானியாவில் சம்பளத்தில் உள்ள ஐரோப்பியர்கள் அல்லாத தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,921,098 என பதிவாகியிருந்தது.

ஆனால் டிசம்பர் 2022ல் அந்த எண்ணிக்கையானது 2,556,741 என உயர்ந்தது. இது 33.08 சதவீத உயர்வு என்றே அரசாங்க தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தான், டிசம்பர் 2022 வரையில், பிரித்தானிய மக்கள்தொகையில் மொத்த புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை 745,000 என அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply