• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைனை விட்டு வெளியேற முயன்ற முன்னாள் ஜனாதிபதி

நாட்டை விட்டு வெளியேற சென்ற உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக உக்ரைனை விட்டு வெளியேறிய முடிவு செய்துள்ளார்.
  
இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சனை சந்தித்து உரையாட திட்டமிட்டு இருந்தார், இதையடுத்து ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனை சந்திக்கவும் முடிவு செய்து இருந்தார்.

ஹங்கேரி ஜனாதிபதி விக்டர் ஆர்பன் ரஷ்ய ஜனாதிபதி புடினை பாராட்டி பேசியதோடு, உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு தனது ஆதரவை ஹங்கேரி வழங்க மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ நாட்டை விட்டு வெளியேறிய முயன்றதால் அவர் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டார் என உக்ரைன் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நாடாளுமன்ற அனுமதி தனக்கு இருந்தும் என்னை அவர்கள் திருப்பி அனுப்பியது ஒற்றுமை மீதான தாக்குதல் என முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ராணுவ சட்டத்தின் படி, 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply