• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நலத்திட்டங்களுக்கு அரச அதிகாரிகளின் ஆதரவில்லை - அமைச்சர் மனுஷ நாணயக்கார

இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களுக்கு சில அரச அதிகாரிகள் ஆதரவளிக்கவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் போது, அவர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. தடை இருந்தது. சில அதிகாரிகளுடன் சண்டையிட்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தோம். அவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

வங்கிகளுடன் கலந்துரையாடி அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, குறைந்த வட்டியில் 5 பில்லியன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு வழங்கத் தயார் செய்தோம், ஆனால் திறைசேரி, மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகளால் இன்னும் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க முடியவில்லை.

சுமார் 14 மாதங்களுக்கு முன்னர், புலம்பெயர் தொழிலாளர்ககள் அனுப்பும் பணத்திற்கு விமான நிலையத்தில் பொருட்கள் கொள்வனவின் போது சலுகைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இது தொடர்பாக ஜனாதிபதி வர்த்தமானியை வெளியிட்டபோதும் எமது சுங்க அதிகாரிகளால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்க முடியவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply